தமிழ்

  1. சீதை – விவேக சிந்தாமணி கட்டுரைத்தொடர்B. R. ராஜம் அய்யர்.

    தமிழில் கம்பராமாயணம் குறித்து நவீன இலக்கியம் சார்ந்து வெளிவந்த முதல் கட்டுரைத்தொடர்.  பதிப்பில் இல்லை.      

  2. கம்ப நாடர்T. செல்வகேசவராய முதலியார்

    முதல் வெளியீடு 1909.  Madras : Diocesan Press , 1926. கம்பனுடைய வாழ்க்கை குறித்து கல்லூரி மாணவர்களுக்காக சிற்றிலக்கியங்கள் மற்றும் நாட்டார் கதைகளில் இருந்து தொகுத்து எழுதப்பட்ட நூல்.    

    கம்ப நாடர்

  3. Kamba Ramayana : A Study – வ. வே. சு. ஐயர்   

    1950. Delhi Tamil Sangam. தமிழாக்கம்: கம்பராமாயணம் ஓர் ஆய்வு – சந்தியா பதிப்பகம்.

    Kamba Ramayana : A Study

  4. கம்பர் தரும் இராமாயணம் (3 பகுதிகள்) டி. கே. சிதம்பரநாத முதலியார்

    1953. பொதிகைமலைப் பதிப்பு. 2012. காவ்யா.
    பாகம் 1 – பால அயோத்தியா காண்டங்கள்
    பாகம் 2 – ஆரண்ய கிட்கிந்தா காண்டங்கள்

  5. கம்பராமாயண ஆராய்ச்சி (கட்டுரை) –   வ. வே. சு. ஐயர்

    1971 (published by his son in his 90th year). 

    கம்பராமாயண ஆராய்ச்சி (கட்டுரை)

  6. கம்பன் மலர் – சென்னை கம்பன் கழக வெளியீடு.

    1946. வையாபுரிப்பிள்ளை, டிகேசி, மு அருணாசலம், பிஸ்ரீ முதலியோர் எழுதிய கட்டுரைகள் அடங்கியது.

    கம்பன் மலர்

  7. கம்பரசம்C. N. அண்ணாத்துரை 

    1946 .    

    கம்பரசம்

  8. வையாபுரிப்பிள்ளை கட்டுரைகள்.

    தமிழ்ச்சுடர் மணிகள் – 1959, குமரி மலர்க் காரியாலயம்.
    கம்பர் காலம், திருநாள் ஆகிய கட்டுரைகள் அடங்கியது. ‘திருநாள்’ கம்பராமாயண அரங்கேற்றம் பற்றிய ஒரு சித்தரிப்பை வழங்குகிறது.
    கம்பன் காவியம் – 1955, தமிழ்ப் புத்தகாலயம்.
    பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளின் தொகுப்பு. கம்பனை கற்பது, ஆராய்ச்சிப் பதிப்பு உருவாக்குவது ஆகியவற்றை பேசுகிறது.
    கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு – 1950, காரைக்குடி கம்பன் கழகம். ஆராய்ச்சிப் பதிப்பின் தேவை, உருவாக்க முறைகள், பிரச்சினைகளை அலசும் நீள்கட்டுரை.

  9. ஆராய்ச்சியுரைத் தொகுதி  எஸ். வையாபுரிப் பிள்ளை

    1980. B.N.Press. ‘கம்பர் திருநாள்’ என்று ஒரு கட்டுரை உள்ளது.

    ஆராய்ச்சியுரைத் தொகுதி 

  10. கம்பனும் மில்ட்டனும் – ஒரு புதிய பார்வை எஸ். ராமகிருஷ்ணன்

    1978.

    கம்பனும் மில்ட்டனும் – ஒரு புதிய பார்வை

  11. இராம காதையும் இராமாயணங்களும்அ. அ. மணவாளன்  

    2005, 2012. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

  12. கு. அழகிரிசாமி கம்பன் எழுத்துக்கள்

    தொகுக்க வேண்டும்.

  13. Epic Heroism in Milton and Kamban அ. அ. மணவாளன்  

    1984. Kovai Kamban Trust.

  14. கம்பன் புதிய பார்வைஅ. ச. ஞானசம்பந்தன்

    1985. கங்கை புத்தக நிலையம்.
    இந்நூல் கம்பனைப் பற்றிய பின்னாளைய பார்வைகள் அனைத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தியது. கம்பன் இந்துமதம் சார்ந்த பார்வையை, பக்தியை முன்வைப்பவர் என்றும் வடவர் கருத்தை முன்வைப்பவர் என்றும் சொல்லப்பட்டு வந்த சூழலில் கம்பன் உலகுதழுவிய மானுட அறத்தை முன்வைக்கும் பெருங்கவிஞர் என வாதிட்டது. கம்பன் பேசுபவை நல்லாட்சி, நல்ல நாடு எனும் அடிப்படை விழுமியங்களையே என அ.ச.ஞானசம்பந்தன் விளக்குகிறார் – தமிழ் விக்கி மதிப்பீடு.

    கம்பன் புதிய பார்வை

  15. இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் –  அ. ச. ஞானசம்பந்தன்

    1948. 2022 – ரிதம் வெளியீடு.

    இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

  16. கம்பனின் அம்பறாத்தூணி – நாஞ்சில் நாடன்

    2014. உமா பதிப்பகம். கம்பனின் சொற்பெட்டகம் பற்றி நாஞ்சில் வெவ்வேறு தருணங்களில் ஆற்றிய உரைகளை தொகுத்து நூலாக்கப்பட்டது. மரபிலக்கிய நோக்கும் நவீன இலக்கிய பிரக்ஞையும் கலந்த நடையில் எழுதப்பட்டது.

  17. கம்பன் கட்டுரைகள்ஜெயமோகன்

    கம்பனும் காமமும்
    காமமும் கம்பனும் – ஒரு காலைநேரம்
    கம்பனும் காமமும், இரண்டு
    கம்பனும் காமமும் 3: அருளும் மருளும் அது
    கம்பனும் காமமும் :ஒருகடிதம் (4)
    குருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]
    மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6
    பிற
    அணிகளின் அணிநடை
    கம்பன் நிகழாத களங்கள்
    தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்
    எரிமருள் வேங்கை
    கம்பனும் குழந்தையும்
    கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி
    நீர்க்கூந்தல்
    பஷீரும் ராமாயணமும்

  18. இராமன் எத்தனை இராமனடிஅ. கா. பெருமாள் 

    2010. காலச்சுவடு.

  19. இராமாயணம் எத்தனை இராமாயணம்அ. கா. பெருமாள் 

    2025. காலச்சுவடு.

  20. கம்பன் ஆய்வடங்கல்ச. சிவகாமி 

    1978. தமிழ்ப் பதிப்பகம். கம்பனை கற்பவருக்கு, ஆய்வு செய்பவருக்கு மிக முக்கியமான கையேடு. அதுவரை வெளிவந்த கம்பன் பதிப்புகள், பல்வேறு தலைப்புகளிலான ஆய்வு நூல்கள், மொழிபெயர்ப்புகள் என விரிந்த நூற்பட்டியலுடன் அவற்றை பற்றிய குறிப்புகளை வழங்கும் annotated bibliography. மிக முக்கியமான நூல்.

    கம்பன் ஆய்வடங்கல்

  21. கம்பனில் இசைத்தமிழ் முனைவர். அரிமளம் பத்மநாபன்

    2016. உமா பதிப்பகம். கம்பனில் உள்ள சந்தம் மற்றும் வண்ணங்கள் குறித்து தமிழ் இலக்கண மற்றும் இசை மரபுகளின் பின்னணியில் விளக்கும் நூல்.

  22. இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள் அ அ மணவாளன்

    2005. நியு சென்சுரி புக் ஹவுஸ்.

  23.  இருபதில் கம்பன் – ச. சிவகாமி

    2002. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

    இருபதில் கம்பன்

  24. கம்பனும் சிவனும்இராய சொக்கலிங்கன்

    1966. அழகப்பா கல்லூரி வெளியீடு.

    கம்பனும் சிவனும்

  25. கம்பனில் தாவரங்கள் இணையதளம்.

    கம்ப ராமாயணத்தில் இடம் பெறும் தாவரங்களை தனியே கண்டு அதன் மீதான சிறு குறிப்புகள் தொகுக்கப்பெற்ற தளம். இதன் தகவல்களை, ஆய்வு முறைமையை வாசகர் பரிசீலித்துக் கொள்க.

    https://treesinkambaramayanam.blogspot.com/

  26. இராமாவதாரச் செய்யுள் பாடாந்தரம் (கட்டுரை) சி. கணேசய்யர்

    1905-1906 . செந்தமிழ் (இதழ்). தீவிர பழந்தமிழ் வரலாற்று  பண்பாட்டு விவாதங்கள் நிகழ்ந்த ‘செந்தமிழ்’  இதழில் இடம் பெற்ற ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்று. கம்பராமாயண பாடவேறுபாடு குறித்து ஆராய்வது.

    https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0000931_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%201905%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.pdf  Pg 20 – 23

  27. திருத்தக்கதேவரும் கம்பரும் (கட்டுரை)  ரா. ராகவையங்கார்

    1905-1906. செந்தமிழ் (இதழ்). செந்தமிழ் இதழில் கம்பர் தமக்கு முந்தைய திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணியிலிருந்து வடிவம், கருத்து ஆகியவற்றை எவ்வாறு பெறுகிறார் என்பதை ஆராயும் கட்டுரை. 

    https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0000931_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%201905%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.pdf – Pg 4 – 16

  28. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்

    1961. தொல்காப்பியர் நூலகம். கம்பர் காலம் குறித்த ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது.

    இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

  29. கால ஆராய்ச்சிமா. இராசமாணிக்கனார்

    அலமு பதிப்பகம். பிற ஆசிரியர்களுடன் கம்பரின் காலம் குறித்த ஆராய்ச்சியும் உள்ளது.

    கால ஆராய்ச்சி

  30. இராமாயணக் கிளைக்கதைகள் ஒப்பீடு கம்பர் – வான்மீகி – துளசிதாசர் இரா. பிரேமா

    1989. மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

    இராமாயணக் கிளைக்கதைகள் ஒப்பீடு கம்பர் – வான்மீகி – துளசிதாசர்

  31. கம்பராமாயண சாரம்வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்

    1969. வெ. ப. சு. நூல் நிலையம்.
    சுப்பிரமணிய முதலியார் கம்பனின் தேர்ந்த பாடல்களைத் தொகுத்து ‘கம்பராமாயண இன்கவித் திரட்டு’ என்ற பெயரில் செந்தமிழ் இதழில் தொடராக எழுதினார். இக்கட்டுரைகள் ஒழுங்கு செய்யப்பட்டு ‘கம்பராமாயணச் சாரம்’ என்ற பெயரில் நூல் வடிவில் வெளிவந்தன. கம்பனின் ஆறு காண்டங்களின் பாடல்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டு நேரடிப் பொருளும் அருஞ்சொற்பொருளும் அடிக்குறிப்புகளும் அளிக்கப்பட்டு வெளியாகின.

    கம்பராமாயண சாரம்

  32. சிறியன சிந்தியாதான் எஸ். இராமகிருஷ்ணன்

    1957. மீனாட்சி புத்தக நிலையம்.

    சிறியன சிந்தியாதான்

  33. கம்பன் கண்ட அரசியல் எஸ். இராமகிருஷ்ணன்

    1959. மீனாட்சி புத்தக நிலையம்.

    கம்பன் கண்ட அரசியல்

  34. கம்பன் களஞ்சியம் ச. சிவகாமி

    2009. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

    கம்பன் களஞ்சியம்

  35. கம்பர் கவியும் கருத்தும்பி. சி. கருத்திருமன் 

    1963. தமிழ்ப் புத்தகாலயம்.

    கம்பர் கவியும் கருத்தும்

  36. தம்பியர் இருவர் அ. ச. ஞானசம்பந்தன்

    1961. 1995. கங்கை புத்தக நிலையம்

    தம்பியர் இருவர்

  37. இராமன் பன்முக நோக்கில்,
    கம்பன் எடுத்த முத்துக்கள்,
    கம்பன் கலை – 1961
    கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்
    அ. ச. ஞானசம்பந்தன்

  38. இராமாயண ஆராய்ச்சி – சந்திரசேகர பாவலர்.

    1930. ஈரோடு : குடிஅரசு பதிப்பகம். குடி அரசில் ‘இதிகாசங்கள்’ என்ற பேரில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு. சந்திர சேகர பண்டித இ.மு சுப்பிரமணிய பிள்ளை எழுதியது. மறு பிரசூரம் 2002.

    இராமாயண ஆராய்ச்சி

  39. வாலி வதை V. V. Srinivasa Chariar

    1933. பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ்: திருநெல்வேலி.

    வாலி வதை

  40. செந்தமிழ் இதழ் கம்பராமாயண கட்டுரைகள்  

    பட்டியலிடவேண்டும்.

  41. ஞானசம்பந்தம் இதழ் கம்பராமாயண கட்டுரைகள்

    பட்டியலிட வேண்டும்.

  42. கம்பன் காட்டும் வைணவப் பேருலகம் – அமுதன்

    2005. கவிதா.

    கம்பராமாயணத்தில் பொதிந்துள்ள வைணவ சமயக் கருத்துக்கள், பக்தி மார்க்கம், மற்றும் நாராயண தத்துவங்களை இந்த நூல் விரிவாக ஆராய்கிறது.

    கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

  43. கம்பர் காலவாராய்ச்சிஇளசை ஸ்ரீ திருமலைச்சாரி

    1930. திருநெல்வேலி : ஹிலால் பிரஸ்.

    கம்பர் காலவாராய்ச்சி

  44. வேதாந்த தீபிகை கம்பர் கட்டுரைகள்

    https://www.tamildigitallibrary.in/periodicals-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ1l0Iy&tag=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88#book1/19

  45. கம்பர் திருநாட் கொண்டாட்டம் (கட்டுரை)  வகுளமாலை (இதழ்) 

    திருவல்லிக்கேணி தமிழ்ச்சங்கம் 1937ல் கம்பர் திருநாள் கொண்டாடியதைப் பற்றிய குறிப்பு.

    கம்பர் திருநாட் கொண்டாட்டம் (கட்டுரை)  

  46. கம்பர் மாநாடு தருங் காட்சி (கட்டுரை)இரா. நெடுஞ்செழியன்

    திராவிட நாடு (இதழ்) திராவிட நாடு இதழில் நெடுஞ்செழியன் கம்பர் மாநாடு குறித்து எழுதிய கட்டுரை.

    கம்பர் மாநாடு தருங் காட்சி (கட்டுரை)

  47. காப்பிய இமயம்என்.வரதராஜுலு நாயுடு

    பழனியப்பா பிரதர்ஸ். 2000.

  48. கம்பரும் வால்மீகியும்நாமக்கல் கவிஞர்

    கம்பரும் வால்மீகியும்

  49. பி. ஸ்ரீ. ஆச்சார்யா கம்பன் நூல்கள்  பி. ஸ்ரீ. ஆச்சார்யா

    கம்பன் பிற ஆழ்வார்கள் உட்பட ஏறத்தாழ 27 நூல்கள் இயற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எதுவும் கிடைப்பதுபோல் தெரியவில்லை. 

  50. கம்பன் கண்ட சமரசம் ,
    கம்பன் கண்ட ராமன்,
    மூன்று வினாக்கள் (வாலிவதை பற்றிய நூல்) – மு. மு. இஸ்மாயில் 

    கம்பன் கண்ட சமரசம்
    மூன்று வினாக்கள்

  51. கம்பன் கண்ட ராமன்,
    கம்பன் சுயசரிதம் 
    தொ. மு. பாஸ்கர தொண்டைமான் 

    2005. நிவேதிதா பதிப்பகம்.   

    கம்பன் கண்ட ராமன்

  52. ஸ்ரீமத்ராமாயண அரங்கேற்றச் சருக்கம் – யாரெழுதிய எந்த நூலின் பகுதியாக இது அமைந்துள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.

    ஸ்ரீமத்ராமாயண அரங்கேற்றச் சருக்கம்

  53. வாலி மோட்சம்சிதம்பர முதலியார்  

    1914. விதியாரத்னாகர அச்சுகூடம்.

    வாலி மோட்சம்

  54. வாலி சரிதைஇ. ஸ்ரீ. கோவிந்தையங்கார்

    1926 . பி நா சிதம்பர முதலியார் பிரதர்ஸ்.

  55. வாலி வதை (சொர்ணம்மாள் சொற்பொழிவுகள்) கோ சுப்பிரமணியப்பிள்ளை , ச. சிவகாமி    

    1979. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

    வாலி வதை (சொர்ணம்மாள் சொற்பொழிவுகள்)

  56. கம்பனில் மக்கள் குரல்ந. சுப்புரெட்டியார்    

    1983. வானதி பதிப்பகம்.

    கம்பனில் மக்கள் குரல்

  57. கம்பன் படைத்த சிறு பாத்திரங்கள்ந. சுப்புரெட்டியார்  

    1979, நாவலர் புத்தக நிலையம்.

    கம்பன் படைத்த சிறு பாத்திரங்கள்

  58. அண்ணல் அநுமன் ந. சுப்புரெட்டியார்         

    பழனியப்பா பிரதர்ஸ்.

    அண்ணல் அநுமன்

  59. கம்பராமாயண கௌஸ்துபம்கெ.என். சிவராஜ பிள்ளை

    1979. சென்னைப் பல்கலைக்கழகம்.                 

    கம்பராமாயண கௌஸ்துபம்

  60. கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்  அ. சீனிவாசன்          

    கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்

  61. இரணியன் வதைப் படலம் ஏன்? மு. மு. இஸ்மாயில்

    1996. கம்பன் கழகம்.

  62. வள்ளுவரும் கம்பரும்  ச. தண்டபாணி தேசிகர்

    1975. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.    

    வள்ளுவரும் கம்பரும்

  63. கம்பர்வ.சு.ப.மாணிக்கம்

    1981. மாணிக்கவாசகர் நூலகம்.

    கம்பர்

  64. தசரதன் குறையும் கைகேயி நிறையும்  – சோமசுந்தர பாரதியார்.

    1972. மதுரை : நாவலர் புத்தக நிலையம்.

    தசரதன் குறையும் கைகேயி நிறையும்

  65. கம்பன் ஒரு சமுதாயப் பார்வை,
    கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2,
    கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும்-1,
    கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும்-2,
    கல்யாணராமனும் பரசுராமனும்,
    ஶ்ரீராமனும் கோதண்டமும்  – அ. சீனிவாசன் (1925 -2006) 

  66. கம்பனில் சங்க இலக்கியம் ,
    கம்பனும் ஆழ்வார்களும் ,
    கம்பனிலிருந்து பாரதி தாசன் வரை – ம பெ ஸ்ரீநிவாசன்

  67. கம்பர் கவிச் சித்திரங்களில் ஒன்பதாவது மிதிலையில் முதல் நாள் – இளசை ஸ்ரீ திருமலைச்சாரி  

    1929. திருப்பதி ஸ்ரீ மஹந்து அச்சுக்கூடம், சென்னை, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – எண் 3645.9)  

  68. கம்பர் காட்டும் உறவும் நட்பும் – ச. சிவகாமி

    உமா பதிப்பகம்.

  69. கம்பன் அன்றும் இன்றும் கு. இராமமூர்த்தி

  70. கம்ப நாடகம்தமிழண்ணல்