-
அங்கம் யாவையும் 2 – ஸ்ரீநிவாஸ்
அங்கம் யாவையும் 1 நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும்கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ;(9650) கைகளுக்கு கோதையும் விரற்புட்டிலும் கட்டி, புயங்களில் கங்கணம் மாட்டுவதைச் சொல்கிறது அடுத்த பாடல். இருபது ஆகிய இராவணனின் கரங்களில், பரந்த தலை கொண்ட அனந்தனின் நஞ்சு தங்கிய கழுத்தில் கறை கிடந்தது போல கோதையும் விரற்குழல்களும். அனந்தனின் தலைகள் பலவாக விரிந்த…
-
அங்கம் யாவையும் 1 – ஸ்ரீநிவாஸ்
(இராவணன் தேர் ஏறு படலத்தை முன்வைத்து) இராவணன் இனி போருக்கு அனுப்ப யாரும் உயிருடனில்லை. எஞ்சியிருந்த ஒரே மைந்தன் மூத்தவன் இந்திரசித்தன் இலக்குவனால் கொல்லப்பட்டான். அரக்கர் என பூலோகம் வாழ்ந்திருந்த அனைவரும் மூதாதை உருவென இராவணனை துணைக்க வந்தவர்கள் இராமனால் இல்லாமலானார்கள். உடன்பிறந்தான், பிள்ளைகள், அமைச்சர்கள், தோழர்கள் என சுற்றம் எவருமில்லை. எஞ்சியவர்களை இறுதியாக ஒருமுறை களமுகப்புக்கு வரச்சொல்லிவிட்டு இராவணன் கடைசிப் போருக்கு தயாராகிறான். அவன் படையணிகள் அணிந்து ஒருக்கமாவதையும், அவனுக்கான தேரில் புறப்பட்டு போர்முகப்புக்கு வருவதையும்…
-
இருள் பருகும் பகழி – பார்கவி
கம்பனின் பத்தாயிரம் பாடல்களை ஒவ்வொன்றாக வாசித்து விவாதித்து கடந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கையில் சற்று வியப்பாகவே இருக்கிறது. அதை ஒட்டி என்ன எழுதலாம் என்று யோசித்த பொழுது, ராவணன் செலுத்தும் தாமதாத்திரத்தை (தாமசாஸ்திரம்) ராமன் சிவ நாமம் செப்பி ஞானத்திரத்தை அனுப்பித் தகர்க்கும் பாடலைப் பற்றிச் சொல்லலாம் என்று தோன்றியது. வாரத்தில் 6-8 மணி நேரம் நேர்நிலையான செயல்பாடுக்காக கொடுத்தது ஒரு காரணம். மேலும், சமீபத்தில் நான் பங்கேற்ற எழுத்தாளர்/மருத்துவர் சுனில் கிருஷ்ணனின் ஆயுர்வேத அறிமுக வகுப்பிற்குப்…
-
குறிப்புகள்: படைக்காட்சிப் படலம்
புதுப்புனல் 566 நேற்றைய அமர்வில் படைக்காட்சிப் படலத்தை தொடங்கி அதன் முதல் 28 பாடல்களை பேசினோம். முன்னரே வாசித்துவரச் சொல்லப்பட்டிருந்ததால் பாடல்களை முழுமையாக தொடக்கத்திலேயே வாசித்து நேரடியாக உரையாடலுக்குள் நுழைந்தோம். Lakshmi Narayanan அமர்வை மட்டுறுத்தினார். முதற்போர் புரி படலத்தில் இராவணன் அனுப்பிய தூதர் உலகம் முழுதும் இருந்து அரக்கர் என இருப்பவர் அனைவரையும் படையெனத் திரட்டி அழைத்து வந்துள்ளனர். மைந்தன் இறப்புக்குப் பின்பான மனநிலையில் இருக்கும் இராவணன் சிறிய உற்சாகத்துடன் கோபுரமேறி அவர்கள் இலங்கை நுழைவதை…
-
செஞ்சொற் கவி இன்பம் – பார்கவி
காதலினால் மானிடற்கு கவிதைகள் உண்டாம் என்ற பாரதி, கல்யாணம் செய்துகொண்டால் என்னாகும் என்று சொல்லவில்லை. இன்று இந்த வரியை வாசிப்பவர்கள், இதற்குப் பகடியாக பதிலை சொல்லிவிட முடியும். நவீன கவிதைகளில், காதல் ஏற்றப்பட்ட அளவுக்கு திருமண உறவு ஏற்றம் பெறவில்லை. இந்தப் பிளவு வள்ளுவரிலும் உண்டு. காமத்துப்பாலில் ‘இல்வாழ்க்கை’யும் ‘வாழ்க்கைத் துணைநல’மும் ‘மக்கட்பேறு’ம் இல்லை. அவை அறத்துப்பாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றன. இத்தனைக்கும் காமத்துப்பாலில் சங்கமரபின்படி ‘களவியல்’ ‘கற்பியல்’ இரண்டுமே அமைந்திருக்கிறது. பிரிந்தவர் கூடி,…
