-
அங்கம் யாவையும் 2 – ஸ்ரீநிவாஸ்
அங்கம் யாவையும் 1 நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும்கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ;(9650) கைகளுக்கு கோதையும் விரற்புட்டிலும் கட்டி, புயங்களில் கங்கணம் மாட்டுவதைச் சொல்கிறது அடுத்த பாடல். இருபது ஆகிய இராவணனின் கரங்களில், பரந்த தலை கொண்ட அனந்தனின் நஞ்சு தங்கிய கழுத்தில் கறை கிடந்தது போல கோதையும் விரற்குழல்களும். அனந்தனின் தலைகள் பலவாக விரிந்த…
-
அங்கம் யாவையும் 1 – ஸ்ரீநிவாஸ்
(இராவணன் தேர் ஏறு படலத்தை முன்வைத்து) இராவணன் இனி போருக்கு அனுப்ப யாரும் உயிருடனில்லை. எஞ்சியிருந்த ஒரே மைந்தன் மூத்தவன் இந்திரசித்தன் இலக்குவனால் கொல்லப்பட்டான். அரக்கர் என பூலோகம் வாழ்ந்திருந்த அனைவரும் மூதாதை உருவென இராவணனை துணைக்க வந்தவர்கள் இராமனால் இல்லாமலானார்கள். உடன்பிறந்தான், பிள்ளைகள், அமைச்சர்கள், தோழர்கள் என சுற்றம் எவருமில்லை. எஞ்சியவர்களை இறுதியாக ஒருமுறை களமுகப்புக்கு வரச்சொல்லிவிட்டு இராவணன் கடைசிப் போருக்கு தயாராகிறான். அவன் படையணிகள் அணிந்து ஒருக்கமாவதையும், அவனுக்கான தேரில் புறப்பட்டு போர்முகப்புக்கு வருவதையும்…
-
இருள் பருகும் பகழி – பார்கவி
கம்பனின் பத்தாயிரம் பாடல்களை ஒவ்வொன்றாக வாசித்து விவாதித்து கடந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கையில் சற்று வியப்பாகவே இருக்கிறது. அதை ஒட்டி என்ன எழுதலாம் என்று யோசித்த பொழுது, ராவணன் செலுத்தும் தாமதாத்திரத்தை (தாமசாஸ்திரம்) ராமன் சிவ நாமம் செப்பி ஞானத்திரத்தை அனுப்பித் தகர்க்கும் பாடலைப் பற்றிச் சொல்லலாம் என்று தோன்றியது. வாரத்தில் 6-8 மணி நேரம் நேர்நிலையான செயல்பாடுக்காக கொடுத்தது ஒரு காரணம். மேலும், சமீபத்தில் நான் பங்கேற்ற எழுத்தாளர்/மருத்துவர் சுனில் கிருஷ்ணனின் ஆயுர்வேத அறிமுக வகுப்பிற்குப்…
-
கம்பநாடன் மொழியும் சேரநாட்டு மொழியும் – இரா. செந்தில்
தமிழகம் என்ற கருத்து உருவான காலம் முதலே சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று சேரநாட்டை முதலில் வைத்துக் கூறுவதே வழக்கமாக இருந்தது. சங்க இலக்கியங்களில் சேர நாட்டின் பங்கு அளப்பரியது. தமிழின் முதல் காவியமான சிலம்பு தோன்றியதும் சேர மண்ணிலிருந்தே. சங்கம் மருவிய காலத்தில் சேரத்தின் கிழக்குப்பகுதி கொங்கு நாடாக மருவிய பிறகும் மேற்கு மலைத்தொடருக்கு அப்பாலிருந்த மேற்குப் பகுதி சேர நாடாகவே நெடுங்காலம் நீடித்தது. காலப்போக்கில் மூவேந்தர் குலமும் மறைய, சேரநாட்டு மொழியும் ‘மலையாளம்’ என்று…
-
அன்பென்ற ஒன்று : பார்கவி
நாம் எதிர் நாயகர்களின் உலகில் வாழ்கிறோம். நவீன உலகில் வாழ்பவருக்கு மீட்பர்கள் மீதான நம்பிக்கை இயல்பாக இற்றுப் போய்விட்டது. காவியங்கள் போலவே காவிய நாயகர்கள் மீதான விமர்சனப்பார்வையும் கூர்மையாகிவிட்டன. காவிய உலகமும் ஒரு விதத்தில் எதிர் நிலை பாத்திரங்களுக்கானவை என்றாலும் இங்கு எதிர் நிலை கதாபாத்திரங்கள் ஆதர்சம் இல்லை என்பதே முக்கிய வேறுபாடு. கம்பன் தனது காவிய முயற்சியில் ராவணனை ஆசையில் அறிவிழந்த பித்தனாகவே சித்தரிக்கிறார். சீதையை தீக்குள் இறங்கச் சொன்ன அன்றே நாம் ராமனை சற்று…
-
காயத்துயிரே விடு காலையினும் மாயத்தொழில் செய்யா அதிகாயன் – மதுநிகா சுரேஷ்
நான் இம்பர்வாரி குழுவில் அதிகாயன் வதைப் படலம் குறித்து ஒரு உரை ஆற்றுவதற்காக அதிகாயனை பற்றிய குறிப்புகள் நூல்களில் தேடிக்கொண்டிருந்தேன். கும்பகர்ணன், வாலி, இந்திரஜித்தின் போன்ற பெரும் வீரர்களை பற்றி குறிப்புகள் கிடைத்தது. ஆனால் மாயத்தை பயன்படுத்தாமல் நேர்வழியில் போரிட்ட அதிகாயன் பற்றி யாரும் அதிகமாக எழுதவில்லை. எனக்கு அது வருத்தமாக இருந்தது. இதுவரை கம்பராமாயணம் குறித்து எழுதும் தைரியம் இல்லாத நான் அதிகாயனுக்காக எழுதுகிறேன். ஒரு மன்னனிடம் அறம் இருந்தால் மட்டுமே அவன் நிலையான அரசை நிறுவ முடியும் என்பதை…
-
ஆரண்யத்தால் அடைவன – ரா. சிவமீனாட்சி செல்லையா
பண்டு, நமது மரபில் வனம் செல்வதென்பது நிகழ்வதே. துறந்தவர் மெய்மை நாடி செல்வர்; வயதில் முதிர்ந்தவர், தன்னிறுதி வனத்தில் நிகழ விழைந்து, வனப்பிரஸ்தம் மேற்கொள்வர்; வேந்தர்கள் வேட்டையாட தனித்தும் படை சூழவும் வனத்திற்கு ஏகுவர்; இவ்வாறும், இன்னும் பலவகை காரணங்களுக்காகவும் வனம் புகுதல் நிகழலாம். நம்முடைய இரு பெரும் இதிகாசங்கள் இரண்டிலும் கதை நாயகர்கள் வனம்புகுதல் முக்கிய நிகழ்வாகிறது. அணுக்க உறவுகளின் மன இருளினால் நாயகர்களை அல்லலுக்குள்ளாக்க திட்டமிடப்படும் அது, அவர்கள் பொலிவதற்கும், அரியனவற்றை அடைவதற்குமான காலமாய்…
