கட்டுரைகள்

  • போரும் அறமும் – முத்து

    ‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக்  கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில்  உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன். சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன்.…

    continue reading…

  • அட்டிச் செம்மிய மிகைக் கனா – பரிமித்தா

    தானை காண் படலம் கிட்கிந்தைப் படலத்தின் தொடர்ச்சியாகும். கிட்கிந்தை படலத்தில் இலட்சுமணன் சுக்ரீவனைக் காண கிட்கிந்தைச் செல்கிறான். இலட்சுமணன் சுக்ரீவனிடம் கார்காலத்திற்குள் வந்து சேர வேண்டிய சேனையைப் பற்றி கேட்டு, அவனை இராமனிடம் அழைத்து வருகிறான். சுக்ரீவன் இராமனிடம் சேனைகள் ‘இன்று, நாளை’க்குள் அனுமனுடன் வந்துவிடும் என பதிலக்கிறான். இவ்வாறாக தானை காண் படலம் தொடங்குகிறது. தானை காண் படலம் என்றால், சுக்ரீவன் இராமலக்குவரிடம் ‘சேனையை காட்டும்‘ படலம் எனப் பொதுவாக பொருள்கொள்ளலாம். கிட்கிந்தைப் படலத்தில் சுக்ரீவன்…

    continue reading…

  • கம்பனில் கதிரோன் – சுதா ஸ்ரீனிவாசன்

    பாடப்புத்தகங்களிலும் பட்டிமன்றங்களிலும் அறிமுகமான கம்பனை முழுமையாக வாசிக்கும் முயற்சியில் பலமுறை அவனோடு கண்ணாமூச்சி ஆடிவிட்டு ஒரு வழியாக அதில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறோம். அவனது சொல்லாட்சியையும் சந்தத்தையும் உவமையையும் ஒவ்வொரு இடத்திலும் வியந்து தீரவில்லை. ஒரே விதமான பொருள்களை வர்ணிக்கும்போதும் அவனது உவமைகள் ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து மாறுபட்டே அமைந்துள்ளன. நகரங்களையும் மதில்களையும் அவற்றின் மாந்தரையும் பற்றி கூறும் வர்ணனைகளில் அயோத்திக்கும் மிதிலைக்கும் இலங்கைக்கும் வேறுபாட்டினை உணரமுடியும். மனிதரின் உணர்வுநிலைகளை கூறும் இடங்களோ பேசித் தீர்க்கமுடியாதவை, அதிலும் சுருங்கச் சொல்லி…

    continue reading…

  • காட்டின் நெறி – கா. சிவா

     2023 – ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று ஒரு உரையாடலில் “கம்பராமாயணத்திற்கு பல்வேறு உரைகள் உள்ளன. அதன் சொல்லாட்சிகளும் அழகியலும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கம்பராமாயணம் கூறும் வேல்யூஸ் (values) பற்றி இப்போது பேசப்படவேண்டும்” என வேறு சொற்களில் ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட வேல்யூ என்பதை விழுமியம் அல்லது நெறி என்று நான் எடுத்துக்கொண்டேன்.      கம்பராமாயணம் என்னும் காப்பியத்தில் நெறிகளை கம்பர் ஒட்டு மொத்தமாக ஒரேயிடத்தில் சொல்லாமல் கதையின் போக்கிற்கேற்ப  பொருத்தமான இடங்களில் கூறிச் செல்கிறார்.…

    continue reading…

  • யுக சந்திகளில் வளையும் அறம் – அருணாச்சலம் மகாராஜன்

    [1] காந்தி வலதுசாரியா, இடதுசாரியா? இன்றைய நிலையில் அவர் தீவிரமான, முற்போக்கு இடதுசாரியாகவே அறியப்படுவார். காந்தியின் கொள்கைகள், சிந்தனைகள் அவரை இடதுசாரி சாய்வுள்ளவராகக் காட்டினாலும் அவர் நிச்சயமாக வலதுசாரி சிந்தனைகளையோ, கொள்கைகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல என அவரை அறிந்த, வாசித்த எவராலும் உறுதியாகக் கூறவியலும். ஆனால் காந்தியும் வலதுசாரி என அழைக்கப்பட்டிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருடைய கருத்துக்களை, கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அவரது நெருங்கிய பிற காங்கிரஸ் சகாக்களான பட்டேல், ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப் பந்த்,…

    continue reading…

  • சீதாராமன் – ஜமீலா கணேசன்

    அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் நான் வசிக்கும் சிறு நகரில் சமீபத்தில் ஒரு ரத ஊர்வலம் இஸ்கான் அமைப்பால் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் நம்ம ஊர் போலவே ரதத்தின் கயிற்றை மக்கள் பிடித்து இழுக்க தேர் பூபோல நகர்ந்து சென்றது. தேர் முன் செல்ல பின்னர் கிருஷ்ணன், ராமன் என பல கடவுளர் வேடமிட்டவர்கள் நடக்க, பார்க்கும் இந்தியர்களும் அமெரிக்கர்களுடன் சேர்ந்து கரகோஷமிட்டார்கள் கிருஷ்ணா வேடமிட்டவர் சக்கரத்தை ஏந்தி இருந்தார் கிருஷ்ணன் அந்தக் காலத்திலேயே வில்…

    continue reading…

  • மினல் மணிக் குலம் – ஸ்ரீநிவாஸ்

    காதலின் வண்ண வேறுபாடுகளைச் சொல்ல அகத்துறை இலக்கியம் பலவகை நிரந்தரப் படிமங்களை கொண்டுள்ளது. குறிப்பாக உள்ளத்து விளையாட்டுகளைச் சொல்ல பளிக்கறை, சந்தன குங்குமக் குழம்புகள், அகிற்புகை, யானையைக் கொன்ற சிம்ம பாதத்தடம், வண்டின் மயக்கம், மாணிக்க மரகதகக் கற்கள் போன்றவை.  இவற்றுக்கிணையான ஒரு படிமம் கம்பனில் நாட்டு வளம், ஆற்று வளம் சொல்லப்படுகையில் ‘ஆற்றில் எஞ்சிய மணிகள்’ அல்லது ‘ஆற்றின் கரையோர நவமணிகள்’ என்பவை. பொதுவாக அருமணிகள் என்பவை மிகையை அழகாகக் கொண்ட நம் காவியங்களில் பரவலாக…

    continue reading…