கட்டுரை
-
யுக சந்திகளில் வளையும் அறம் – அருணாச்சலம் மகாராஜன்
[1] காந்தி வலதுசாரியா, இடதுசாரியா? இன்றைய நிலையில் அவர் தீவிரமான, முற்போக்கு இடதுசாரியாகவே அறியப்படுவார். காந்தியின் கொள்கைகள், சிந்தனைகள் அவரை இடதுசாரி சாய்வுள்ளவராகக் காட்டினாலும் அவர் நிச்சயமாக வலதுசாரி சிந்தனைகளையோ, கொள்கைகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல என அவரை அறிந்த, வாசித்த எவராலும் உறுதியாகக் கூறவியலும். ஆனால் காந்தியும் வலதுசாரி என அழைக்கப்பட்டிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருடைய கருத்துக்களை, கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அவரது நெருங்கிய பிற காங்கிரஸ் சகாக்களான பட்டேல், ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப் பந்த்,… Continue reading
-
சீதாராமன் – ஜமீலா கணேசன்
அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் நான் வசிக்கும் சிறு நகரில் சமீபத்தில் ஒரு ரத ஊர்வலம் இஸ்கான் அமைப்பால் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் நம்ம ஊர் போலவே ரதத்தின் கயிற்றை மக்கள் பிடித்து இழுக்க தேர் பூபோல நகர்ந்து சென்றது. தேர் முன் செல்ல பின்னர் கிருஷ்ணன், ராமன் என பல கடவுளர் வேடமிட்டவர்கள் நடக்க, பார்க்கும் இந்தியர்களும் அமெரிக்கர்களுடன் சேர்ந்து கரகோஷமிட்டார்கள் கிருஷ்ணா வேடமிட்டவர் சக்கரத்தை ஏந்தி இருந்தார் கிருஷ்ணன் அந்தக் காலத்திலேயே வில்… Continue reading
-
மினல் மணிக் குலம் – ஸ்ரீநிவாஸ்
காதலின் வண்ண வேறுபாடுகளைச் சொல்ல அகத்துறை இலக்கியம் பலவகை நிரந்தரப் படிமங்களை கொண்டுள்ளது. குறிப்பாக உள்ளத்து விளையாட்டுகளைச் சொல்ல பளிக்கறை, சந்தன குங்குமக் குழம்புகள், அகிற்புகை, யானையைக் கொன்ற சிம்ம பாதத்தடம், வண்டின் மயக்கம், மாணிக்க மரகதகக் கற்கள் போன்றவை. இவற்றுக்கிணையான ஒரு படிமம் கம்பனில் நாட்டு வளம், ஆற்று வளம் சொல்லப்படுகையில் ‘ஆற்றில் எஞ்சிய மணிகள்’ அல்லது ‘ஆற்றின் கரையோர நவமணிகள்’ என்பவை. பொதுவாக அருமணிகள் என்பவை மிகையை அழகாகக் கொண்ட நம் காவியங்களில் பரவலாக… Continue reading
