Kambaramayanam
-
நெய்குழல் உறும் இழை – லக்ஷ்மி நாராயணன்
“வளையொடு திகிரியும், வடவை தீதரவிளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,இளையவர்கள் என அடி பரவி ஏக நாம்வளைமதில் அயோத்தியில் வருதும்” (201, பால காண்டம்) வடவாமுகாக்கினியும் கரிந்து போகும் அளவிற்கு பொங்கு விஷம் (சினம்) கொண்ட ஆதிசேஷனின் அவதாரம் இலக்குவன். காப்பியம் முழுக்க ராமனைத் தொடர்ந்து வந்தாலும் கம்பராமாயண உரைகளிலோ, ஆய்வுகளிலோ அதிகம் பேசப்படாதவன் இலக்குவன். பரதனோ, குஹனோ, வீடணனைப்பற்றியோ எழுதப்பட்டதை விட இலக்குவன் பற்றி எழுதப்பட்டது மிகக்குறைவு. அனுமனைப் பற்றி சொல்லவே தேவை இல்லை. வனவாசம் ராமனுக்கு… Continue reading
-
லங்காதகனம் – பிரபு
சுந்தர காண்டத்தில் உள்ள இலங்கை எரியூட்டு படலத்தை பற்றி சில சொற்கள் முன்வைக்க நினைக்கிறேன். சுருக்கமாச் சொன்னால் சீதையைத் தேடிப் போகின்ற அனுமன் இலங்கையை எரிக்கின்றான். படலத்திற்குள் செல்வதற்கு முன் ஒரு வரலாற்று நிகழ்வில் இருந்து தொடங்குவோம். நமக்கு தெரிய சமீபத்தில் நடந்த பெரும் போர்களில் ஒன்று இரண்டாம் உலகப் போர். அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டை வீசும் போது அப்போர் முடிவுக்கு வருகிறது. அணுகுண்டை நாம் நெருப்பின் நவீன வடிவம் (மாடர்ன்… Continue reading
-
போரும் குரங்கும் 2 – கமலநாதன், விஜயபாரதி
கமலநாதன்: இலங்கை மாநகர் ஒரு குரங்கினால் சின்னாபின்னப் படுத்தப்படுகிறது. அரக்க வேந்தன் ஆர்வமாக போற்றிக் காத்த அசோகவனம் அழிக்கப்படுகிறது. எனவே இப்படி ஒரு ஆணை இடுகிறான், “வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றி கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்தீர் என்றான் .” ஏதோ ஒரு சாதாரண குரங்கை பிடிக்கச் சென்று அதை அடித்து நசுக்கி விடாமல் என்னிடம் உயிருடன் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறான். 60,000 கிங்கரர்களும், பஞ்ச சேனாதிபதிகளும், ஜம்புமாலியும் கொல்லப்படுகிறார்கள். இவர்கள்… Continue reading
-
அருந்துயர், நெடுந்துயர் – பார்கவி
[1] என் நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட நிபந்தனையுடன் புத்தகப் பரிந்துரை கேட்பதுண்டு. துயரத்தின் சாயலின்றி இருக்க வேண்டுமாம். அது தானே நம் வாழ்க்கையின் லட்சியமும். படக்கதைகளைக் கூட பரிந்துரைக்க முடியாத நிபந்தனை அது என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லிவிடுவேன். துயரம் வெறும் துயரமாகவே கையளிக்கப் படக்கூடாது என்பதே அவர்களுடைய உள்ளக்கிடக்கையாக இருக்கக்கூடும். அத்தனை பேரிலக்கியங்களும் மானுட துயரின் வழியாக இன்னொன்றை பேசும் பொருட்டே எழுதப்பட்டிருக்கின்றன. அவை இருக்க மிகப் பெரும்பான்மையினர் தித்திப்பு காதல் அல்லது கூர்வன்முறை வகை புத்தகங்களை,… Continue reading
-
முளைப்பன முறுவல் – கலாதேவி
அலிஸ் மன்றோவின் (Alice Munro) டியர் லைஃப் ( Dear Life ) என்ற சிறுகதைத் தொகுதியில் இருந்த Haven (புகலிடம்) என்ற சிறுகதையை வாசித்த பின் கொஞ்ச நேரம் அந்த கதையிலேயே உலாவிக் கொண்டிருந்தேன். கதை எழுபதுகளில் கனடாவில் உள்ள சிறு நகரத்தில் நடக்கிறது. கதை சொல்லி தனது சித்தியுடனும் சித்தப்பாவுடனும் வசிக்கும் பதின்மவயதுச் சிறுமி. அவளது பெற்றோர் ஆப்பிரிக்க நாடொன்றுக்கு சென்று விடுவதால் அவர்களுடன் வசிக்கிறாள். மிகவும் சுதந்திரமான பெண்ணான தனது அம்மாவிற்கும் கணவனின்… Continue reading
-
போரும் அறமும் – முத்து
‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக் கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன். சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன்.… Continue reading
-
நிலமகள் முகமோ – மருதுபாண்டியன்
ஜெயமோகன் ‘எழுதும் கலை’ புத்தகத்தில் கதை எழுதுவது பற்றி சொல்கையில், எழுத்தாளன் கதையை சொல்லக்கூடாது, கண்ணில் காட்ட வேண்டும் என்பார். அப்படி கண்ணால் காட்டுவதன் உச்சமாகத்தான் நான் கம்பராமாயணத்தைப் பார்க்கிறேன். அதுவும் நிலக்காட்சிகளையும் ஊர்க்காட்சிகளையும் கம்பன் தன் வார்த்தைகளால் நம் மனதில் கட்டியெழுப்பும்போது ஏற்படும் அனுபவம் மிகவும் பரவசமூட்டுவது. கம்பன் அயோத்தியைப் பற்றி கூறும்போது, சந்திரனும் சூரியனும் நாள்தோறும் கண் இமைக்காமல் வானிலே சுற்றி வரக் காரணம், இந்நகரை காண வேண்டும் என்பதற்காகத்தான். மாயோன் மார்பில் நல்மணிகள்… Continue reading
-
கீரையும் காயும் – பரிமித்தா
ஒரு வாரநாளின் விடியல் தொடங்கியது. என் தாயார் பூஜையறையிலிருந்து தூபக்கல்லை எடுத்துக் கொண்டு வந்தார். ”புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி.. இந்தக் கீரைய மட்டும் எதுக்கு வெச்சிருக்கே?.. சுருங்கீறாதா அது, இதையும் சேர்த்துப் போடு” என்றார். ”வெட்டணும்” என்றேன் நான். சட்டென்று எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. “இது கீரை இல்ல தெரியுமா. சரியா சொல்லனும்னா கொடி. கம்பர் எழுதியிருக்கார். இது கரையோரத்தல தான் வளரும். இப்போ இந்த கொடி கொமர்ஷலைஸ்ட் ஆனதுனால… Continue reading
-
அட்டிச் செம்மிய மிகைக் கனா – பரிமித்தா
தானை காண் படலம் கிட்கிந்தைப் படலத்தின் தொடர்ச்சியாகும். கிட்கிந்தை படலத்தில் இலட்சுமணன் சுக்ரீவனைக் காண கிட்கிந்தைச் செல்கிறான். இலட்சுமணன் சுக்ரீவனிடம் கார்காலத்திற்குள் வந்து சேர வேண்டிய சேனையைப் பற்றி கேட்டு, அவனை இராமனிடம் அழைத்து வருகிறான். சுக்ரீவன் இராமனிடம் சேனைகள் ‘இன்று, நாளை’க்குள் அனுமனுடன் வந்துவிடும் என பதிலக்கிறான். இவ்வாறாக தானை காண் படலம் தொடங்குகிறது. தானை காண் படலம் என்றால், சுக்ரீவன் இராமலக்குவரிடம் ‘சேனையை காட்டும்‘ படலம் எனப் பொதுவாக பொருள்கொள்ளலாம். கிட்கிந்தைப் படலத்தில் சுக்ரீவன்… Continue reading
-
மழைபொரு கண் இணை – விஜயலக்ஷ்மி ராஜ்குமார்
நான் தமிழ் மரபிலக்கியங்களை அவ்வளவு விரும்பி வாசித்தவள் கிடையாது. ஒரு காலத்தில் என்னை பொருத்தவரை வெறும் மனப்பாடப் பகுதிகள் அவை. தமிழ் பாடத்தில் சிறிது முயன்றால் மதிப்பெண்களை முழுமையாக பெற்று தரக்கூடிய வரப்பிரசாத பகுதிகள். மனப்பாடம் செய்து ஒன்றுக்கு ஐந்து தடவை எழுதிப் பார்த்தால் போதும். அப்படி எப்போதோ தமிழ் போட்டிக்காக மனனம் செய்த சிலப்பதிகாரப்பகுதி ஒன்று இன்றும் நினைவில் உள்ளது. இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை கம்பனில் இறக்கி விட்டது இம்பார்வாரி குழு. அவர்கள் 300… Continue reading
