இராவணன்

  • அங்கம் யாவையும் 2 – ஸ்ரீநிவாஸ்

    அங்கம் யாவையும் 1 நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும்கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ;(9650) கைகளுக்கு கோதையும் விரற்புட்டிலும் கட்டி, புயங்களில் கங்கணம் மாட்டுவதைச் சொல்கிறது அடுத்த பாடல். இருபது ஆகிய இராவணனின் கரங்களில், பரந்த தலை கொண்ட அனந்தனின் நஞ்சு தங்கிய கழுத்தில் கறை கிடந்தது போல கோதையும் விரற்குழல்களும். அனந்தனின் தலைகள் பலவாக விரிந்த… Continue reading

  • அங்கம் யாவையும் 1 – ஸ்ரீநிவாஸ்

    (இராவணன் தேர் ஏறு படலத்தை முன்வைத்து) இராவணன் இனி போருக்கு அனுப்ப யாரும் உயிருடனில்லை. எஞ்சியிருந்த ஒரே மைந்தன் மூத்தவன் இந்திரசித்தன் இலக்குவனால் கொல்லப்பட்டான். அரக்கர் என பூலோகம் வாழ்ந்திருந்த அனைவரும் மூதாதை உருவென இராவணனை துணைக்க வந்தவர்கள் இராமனால் இல்லாமலானார்கள். உடன்பிறந்தான், பிள்ளைகள், அமைச்சர்கள், தோழர்கள் என சுற்றம் எவருமில்லை. எஞ்சியவர்களை இறுதியாக ஒருமுறை களமுகப்புக்கு வரச்சொல்லிவிட்டு இராவணன் கடைசிப் போருக்கு தயாராகிறான். அவன் படையணிகள் அணிந்து ஒருக்கமாவதையும், அவனுக்கான தேரில் புறப்பட்டு போர்முகப்புக்கு வருவதையும்… Continue reading

  • போரும் அறமும் – முத்து

    ‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக்  கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில்  உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன். சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன்.… Continue reading