இராமன்

  • ஆரண்யத்தால் அடைவன – ரா. சிவமீனாட்சி செல்லையா

    பண்டு, நமது மரபில் வனம் செல்வதென்பது நிகழ்வதே. துறந்தவர் மெய்மை நாடி செல்வர்; வயதில் முதிர்ந்தவர், தன்னிறுதி வனத்தில் நிகழ விழைந்து, வனப்பிரஸ்தம் மேற்கொள்வர்; வேந்தர்கள் வேட்டையாட தனித்தும் படை சூழவும் வனத்திற்கு ஏகுவர்; இவ்வாறும், இன்னும்  பலவகை காரணங்களுக்காகவும் வனம் புகுதல் நிகழலாம். நம்முடைய இரு பெரும் இதிகாசங்கள்  இரண்டிலும் கதை  நாயகர்கள் வனம்புகுதல் முக்கிய நிகழ்வாகிறது. அணுக்க உறவுகளின் மன இருளினால்  நாயகர்களை அல்லலுக்குள்ளாக்க திட்டமிடப்படும் அது, அவர்கள் பொலிவதற்கும், அரியனவற்றை அடைவதற்குமான காலமாய்… Continue reading

  • போரும் அறமும் – முத்து

    ‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக்  கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில்  உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன். சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன்.… Continue reading

  • கீரையும் காயும் – பரிமித்தா

    ஒரு வாரநாளின் விடியல் தொடங்கியது. என் தாயார் பூஜையறையிலிருந்து தூபக்கல்லை எடுத்துக் கொண்டு வந்தார். ”புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி.. இந்தக் கீரைய மட்டும் எதுக்கு வெச்சிருக்கே?.. சுருங்கீறாதா அது, இதையும் சேர்த்துப் போடு” என்றார். ”வெட்டணும்” என்றேன் நான். சட்டென்று எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. “இது கீரை இல்ல தெரியுமா. சரியா சொல்லனும்னா கொடி. கம்பர் எழுதியிருக்கார். இது கரையோரத்தல தான் வளரும். இப்போ இந்த கொடி கொமர்ஷலைஸ்ட் ஆனதுனால… Continue reading

  • மழைபொரு கண் இணை – விஜயலக்ஷ்மி ராஜ்குமார்

    நான் தமிழ் மரபிலக்கியங்களை அவ்வளவு  விரும்பி வாசித்தவள் கிடையாது. ஒரு காலத்தில் என்னை பொருத்தவரை வெறும் மனப்பாடப் பகுதிகள் அவை. தமிழ் பாடத்தில் சிறிது முயன்றால் மதிப்பெண்களை முழுமையாக பெற்று தரக்கூடிய வரப்பிரசாத பகுதிகள். மனப்பாடம் செய்து ஒன்றுக்கு ஐந்து தடவை எழுதிப் பார்த்தால் போதும். அப்படி எப்போதோ தமிழ் போட்டிக்காக மனனம் செய்த சிலப்பதிகாரப்பகுதி ஒன்று இன்றும் நினைவில் உள்ளது. இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை கம்பனில் இறக்கி விட்டது இம்பார்வாரி குழு. அவர்கள் 300… Continue reading

  • காட்டின் நெறி – கா. சிவா

     2023 – ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று ஒரு உரையாடலில் “கம்பராமாயணத்திற்கு பல்வேறு உரைகள் உள்ளன. அதன் சொல்லாட்சிகளும் அழகியலும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கம்பராமாயணம் கூறும் வேல்யூஸ் (values) பற்றி இப்போது பேசப்படவேண்டும்” என வேறு சொற்களில் ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட வேல்யூ என்பதை விழுமியம் அல்லது நெறி என்று நான் எடுத்துக்கொண்டேன்.      கம்பராமாயணம் என்னும் காப்பியத்தில் நெறிகளை கம்பர் ஒட்டு மொத்தமாக ஒரேயிடத்தில் சொல்லாமல் கதையின் போக்கிற்கேற்ப  பொருத்தமான இடங்களில் கூறிச் செல்கிறார்.… Continue reading

  • யுக சந்திகளில் வளையும் அறம் – அருணாச்சலம் மகாராஜன்

    [1] காந்தி வலதுசாரியா, இடதுசாரியா? இன்றைய நிலையில் அவர் தீவிரமான, முற்போக்கு இடதுசாரியாகவே அறியப்படுவார். காந்தியின் கொள்கைகள், சிந்தனைகள் அவரை இடதுசாரி சாய்வுள்ளவராகக் காட்டினாலும் அவர் நிச்சயமாக வலதுசாரி சிந்தனைகளையோ, கொள்கைகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல என அவரை அறிந்த, வாசித்த எவராலும் உறுதியாகக் கூறவியலும். ஆனால் காந்தியும் வலதுசாரி என அழைக்கப்பட்டிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருடைய கருத்துக்களை, கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அவரது நெருங்கிய பிற காங்கிரஸ் சகாக்களான பட்டேல், ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப் பந்த்,… Continue reading

  • சீதாராமன் – ஜமீலா கணேசன்

    அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் நான் வசிக்கும் சிறு நகரில் சமீபத்தில் ஒரு ரத ஊர்வலம் இஸ்கான் அமைப்பால் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் நம்ம ஊர் போலவே ரதத்தின் கயிற்றை மக்கள் பிடித்து இழுக்க தேர் பூபோல நகர்ந்து சென்றது. தேர் முன் செல்ல பின்னர் கிருஷ்ணன், ராமன் என பல கடவுளர் வேடமிட்டவர்கள் நடக்க, பார்க்கும் இந்தியர்களும் அமெரிக்கர்களுடன் சேர்ந்து கரகோஷமிட்டார்கள் கிருஷ்ணா வேடமிட்டவர் சக்கரத்தை ஏந்தி இருந்தார் கிருஷ்ணன் அந்தக் காலத்திலேயே வில்… Continue reading