அனுமன்

  • லங்காதகனம் – பிரபு

    சுந்தர காண்டத்தில் உள்ள இலங்கை எரியூட்டு படலத்தை பற்றி சில சொற்கள் முன்வைக்க நினைக்கிறேன். சுருக்கமாச் சொன்னால் சீதையைத் தேடிப் போகின்ற அனுமன் இலங்கையை எரிக்கின்றான்.  படலத்திற்குள் செல்வதற்கு முன் ஒரு வரலாற்று நிகழ்வில் இருந்து தொடங்குவோம். நமக்கு தெரிய சமீபத்தில் நடந்த பெரும் போர்களில் ஒன்று இரண்டாம் உலகப் போர். அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டை வீசும் போது அப்போர் முடிவுக்கு வருகிறது. அணுகுண்டை நாம்  நெருப்பின் நவீன வடிவம் (மாடர்ன்… Continue reading

  • போரும் குரங்கும் 2 – கமலநாதன், விஜயபாரதி

    கமலநாதன்: இலங்கை மாநகர் ஒரு குரங்கினால் சின்னாபின்னப் படுத்தப்படுகிறது. அரக்க வேந்தன் ஆர்வமாக போற்றிக் காத்த அசோகவனம் அழிக்கப்படுகிறது. எனவே இப்படி ஒரு ஆணை இடுகிறான், “வல்லையின் அகலா வண்ணம்,  வானையும் வழியை மாற்றி  கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்தீர் என்றான் .” ஏதோ ஒரு சாதாரண குரங்கை பிடிக்கச் சென்று அதை அடித்து நசுக்கி விடாமல் என்னிடம் உயிருடன் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறான். 60,000 கிங்கரர்களும், பஞ்ச சேனாதிபதிகளும், ஜம்புமாலியும் கொல்லப்படுகிறார்கள். இவர்கள்… Continue reading

  • காட்டின் நெறி – கா. சிவா

     2023 – ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று ஒரு உரையாடலில் “கம்பராமாயணத்திற்கு பல்வேறு உரைகள் உள்ளன. அதன் சொல்லாட்சிகளும் அழகியலும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கம்பராமாயணம் கூறும் வேல்யூஸ் (values) பற்றி இப்போது பேசப்படவேண்டும்” என வேறு சொற்களில் ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட வேல்யூ என்பதை விழுமியம் அல்லது நெறி என்று நான் எடுத்துக்கொண்டேன்.      கம்பராமாயணம் என்னும் காப்பியத்தில் நெறிகளை கம்பர் ஒட்டு மொத்தமாக ஒரேயிடத்தில் சொல்லாமல் கதையின் போக்கிற்கேற்ப  பொருத்தமான இடங்களில் கூறிச் செல்கிறார்.… Continue reading