உரை

  • காயத்துயிரே விடு காலையினும் மாயத்தொழில் செய்யா அதிகாயன் – மதுநிகா சுரேஷ்

    நான் இம்பர்வாரி குழுவில் அதிகாயன் வதைப் படலம் குறித்து ஒரு உரை ஆற்றுவதற்காக அதிகாயனை பற்றிய குறிப்புகள் நூல்களில் தேடிக்கொண்டிருந்தேன். கும்பகர்ணன், வாலி, இந்திரஜித்தின் போன்ற பெரும் வீரர்களை பற்றி குறிப்புகள் கிடைத்தது. ஆனால் மாயத்தை பயன்படுத்தாமல் நேர்வழியில் போரிட்ட அதிகாயன் பற்றி யாரும் அதிகமாக எழுதவில்லை. எனக்கு அது வருத்தமாக இருந்தது. இதுவரை கம்பராமாயணம் குறித்து எழுதும் தைரியம் இல்லாத நான் அதிகாயனுக்காக எழுதுகிறேன். ஒரு மன்னனிடம் அறம் இருந்தால் மட்டுமே அவன் நிலையான அரசை நிறுவ முடியும் என்பதை… Continue reading

  • லங்காதகனம் – பிரபு

    சுந்தர காண்டத்தில் உள்ள இலங்கை எரியூட்டு படலத்தை பற்றி சில சொற்கள் முன்வைக்க நினைக்கிறேன். சுருக்கமாச் சொன்னால் சீதையைத் தேடிப் போகின்ற அனுமன் இலங்கையை எரிக்கின்றான்.  படலத்திற்குள் செல்வதற்கு முன் ஒரு வரலாற்று நிகழ்வில் இருந்து தொடங்குவோம். நமக்கு தெரிய சமீபத்தில் நடந்த பெரும் போர்களில் ஒன்று இரண்டாம் உலகப் போர். அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டை வீசும் போது அப்போர் முடிவுக்கு வருகிறது. அணுகுண்டை நாம்  நெருப்பின் நவீன வடிவம் (மாடர்ன்… Continue reading

  • போரும் குரங்கும் 2 – கமலநாதன், விஜயபாரதி

    கமலநாதன்: இலங்கை மாநகர் ஒரு குரங்கினால் சின்னாபின்னப் படுத்தப்படுகிறது. அரக்க வேந்தன் ஆர்வமாக போற்றிக் காத்த அசோகவனம் அழிக்கப்படுகிறது. எனவே இப்படி ஒரு ஆணை இடுகிறான், “வல்லையின் அகலா வண்ணம்,  வானையும் வழியை மாற்றி  கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்தீர் என்றான் .” ஏதோ ஒரு சாதாரண குரங்கை பிடிக்கச் சென்று அதை அடித்து நசுக்கி விடாமல் என்னிடம் உயிருடன் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறான். 60,000 கிங்கரர்களும், பஞ்ச சேனாதிபதிகளும், ஜம்புமாலியும் கொல்லப்படுகிறார்கள். இவர்கள்… Continue reading