Kamban

  • செஞ்சொற் கவி இன்பம் – பார்கவி

    காதலினால் மானிடற்கு கவிதைகள் உண்டாம் என்ற பாரதி, கல்யாணம் செய்துகொண்டால் என்னாகும் என்று சொல்லவில்லை. இன்று இந்த வரியை வாசிப்பவர்கள், இதற்குப் பகடியாக பதிலை சொல்லிவிட முடியும். நவீன கவிதைகளில், காதல் ஏற்றப்பட்ட அளவுக்கு திருமண உறவு ஏற்றம் பெறவில்லை. இந்தப் பிளவு வள்ளுவரிலும் உண்டு. காமத்துப்பாலில் ‘இல்வாழ்க்கை’யும் ‘வாழ்க்கைத் துணைநல’மும் ‘மக்கட்பேறு’ம் இல்லை. அவை அறத்துப்பாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றன. இத்தனைக்கும் காமத்துப்பாலில் சங்கமரபின்படி ‘களவியல்’ ‘கற்பியல்’ இரண்டுமே அமைந்திருக்கிறது. பிரிந்தவர் கூடி,… Continue reading

  • முளைப்பன முறுவல் – கலாதேவி

    அலிஸ் மன்றோவின் (Alice Munro) டியர் லைஃப் ( Dear Life ) என்ற சிறுகதைத் தொகுதியில் இருந்த Haven (புகலிடம்) என்ற சிறுகதையை வாசித்த பின் கொஞ்ச நேரம் அந்த கதையிலேயே உலாவிக் கொண்டிருந்தேன். கதை எழுபதுகளில் கனடாவில் உள்ள சிறு நகரத்தில் நடக்கிறது. கதை சொல்லி தனது சித்தியுடனும் சித்தப்பாவுடனும் வசிக்கும் பதின்மவயதுச் சிறுமி. அவளது பெற்றோர் ஆப்பிரிக்க நாடொன்றுக்கு சென்று விடுவதால் அவர்களுடன் வசிக்கிறாள். மிகவும் சுதந்திரமான பெண்ணான தனது அம்மாவிற்கும் கணவனின்… Continue reading

  • போரும் அறமும் – முத்து

    ‘தாயே, நான் ராமனிடம் போய் சீதையைக்  கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள் என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில்  உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்’ என்று யோசனை சொல்கிறான் அனுமன். சீதையோ, ‘இல்லை. நான் அப்படி செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வரவேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப் படவேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன்.… Continue reading

  • மழைபொரு கண் இணை – விஜயலக்ஷ்மி ராஜ்குமார்

    நான் தமிழ் மரபிலக்கியங்களை அவ்வளவு  விரும்பி வாசித்தவள் கிடையாது. ஒரு காலத்தில் என்னை பொருத்தவரை வெறும் மனப்பாடப் பகுதிகள் அவை. தமிழ் பாடத்தில் சிறிது முயன்றால் மதிப்பெண்களை முழுமையாக பெற்று தரக்கூடிய வரப்பிரசாத பகுதிகள். மனப்பாடம் செய்து ஒன்றுக்கு ஐந்து தடவை எழுதிப் பார்த்தால் போதும். அப்படி எப்போதோ தமிழ் போட்டிக்காக மனனம் செய்த சிலப்பதிகாரப்பகுதி ஒன்று இன்றும் நினைவில் உள்ளது. இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை கம்பனில் இறக்கி விட்டது இம்பார்வாரி குழு. அவர்கள் 300… Continue reading

  • கம்பனில் கதிரோன் – சுதா ஸ்ரீனிவாசன்

    பாடப்புத்தகங்களிலும் பட்டிமன்றங்களிலும் அறிமுகமான கம்பனை முழுமையாக வாசிக்கும் முயற்சியில் பலமுறை அவனோடு கண்ணாமூச்சி ஆடிவிட்டு ஒரு வழியாக அதில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறோம். அவனது சொல்லாட்சியையும் சந்தத்தையும் உவமையையும் ஒவ்வொரு இடத்திலும் வியந்து தீரவில்லை. ஒரே விதமான பொருள்களை வர்ணிக்கும்போதும் அவனது உவமைகள் ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து மாறுபட்டே அமைந்துள்ளன. நகரங்களையும் மதில்களையும் அவற்றின் மாந்தரையும் பற்றி கூறும் வர்ணனைகளில் அயோத்திக்கும் மிதிலைக்கும் இலங்கைக்கும் வேறுபாட்டினை உணரமுடியும். மனிதரின் உணர்வுநிலைகளை கூறும் இடங்களோ பேசித் தீர்க்கமுடியாதவை, அதிலும் சுருங்கச் சொல்லி… Continue reading

  • Kamban and sexuality – A letter

    Translation of an article by Tamil Author B.Jeyamohan’s written as a response to a reader by Bhargavi. Click here to read the original article. Cyril Alex: “To a contemporary reader, indulging in Kamban’s works is liberating. It levitates us from the weight of this world, from the steel cages that we live in, and allows… Continue reading